1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 அக்டோபர் 2018 (18:24 IST)

மழை எல்லாம் ஒரு காரணமா? தேர்தலை சந்திக்க பயப்படும் அதிமுக!

இன்று 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

 
தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காதது குறித்து பின்வருமாறு பேசினார். தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளில் மழை காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டாம் என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியிருப்பதால் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார். 
 
தமிழக தேர்தல் அதிகாரியின் இந்த முடிவை முதல்வர் அறியாமல் இருக்கமாட்டார். இதன் மூலம், ஆளும் தரப்பினருக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதில் விருப்பமில்லை என்று தெரிகிறது. ஆனால், இதற்காக கூறப்பட்ட காரணம்தான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாய் உள்ளது. 
 
இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது என்பதற்காக டிசம்பரில் நடைபெறவுள்ள தேர்தல் தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன? ஒருவேலை அதிமுக பயத்தால் இடைத்தேர்தல் தேதியை இப்போது அறிவிக்க வேண்டாம் என கூறியதா? என்ற சந்தேகமும் எழுகிறது.