1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (23:16 IST)

முத்தலாக் மசோதாவால் இரண்டாக பிளவுபடும் அதிமுக

நேற்று பாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவை அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தருவதாக பேசியது அதிமுக தலைவர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
ஒட்டுமொத்த அதிமுகவும் இந்த மசோதாவை எதிர்த்து பேசி வரும் நிலையில் திடீரென ரவீந்திரநாத் குமார் இந்த மசோதாவுக்கு ஆதரவு எனக் கூறியது எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம். ஆனால் இந்தப் பேச்சுக்குப் பின்னணியில் துணை முதல்வர் ஓபிஎஸ் இருப்பதாக  ஒரு சிலர் கூறுகின்றனர்
 
சமீபத்தில் டெல்லி சென்ற ஓபிஎஸ், அமித்ஷா  உட்பட பல முக்கிய தலைவர்களைச் சந்தித்தபோது தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என கோரிக்கை வைத்தாராம். அதற்காக பாஜவுக்கு எந்த வகையிலும் உதவி செய்ய தயார் என்று ஓபிஎஸ் கூறியதாகவும் தெரிகிறது 
 
இதனை மெய்ப்பித்துக் காட்டவே ரவீந்திரநாத் குமார் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவாக பேசியதாகவும், அவ்வாறு பேசச்சொன்னதே ஓபிஎஸ் என்றும் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த மசோதாவால் அதிமுக இரண்டு பிளவுகள் ஆகும் அபாயம் இருப்பதாக அதிமுக தொண்டர்கள் கவலையுடன் நோக்கி வருகின்றனர்