சென்னைக்கு வந்த அதானி யாரை சந்தித்தார்? அறப்போர் இயக்கம் கேள்வி..!
சென்னைக்கு வந்தா அதானி யாரை சந்தித்தார் என அறப்போர் இயக்கம் கேள்வி கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் பிரபல தொழிலதிபர் அதானி சென்னை வந்த நிலையில் சில ரகசிய சந்திப்புகள் நடந்ததாக கூறப்பட்டது. அவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை தான் சந்தித்தார் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு சட்டமன்றத்தில் பதிலளித்த முதல்வர் அதானியை தான் சந்திக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் அறப்போர் இயக்கம் தனது சமூக வலைதளத்தில் சென்னை வந்த போது அதானி யாரை சந்தித்தார் என்று கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:
ஜூலை 2024ல் கௌதம் அதானி சென்னை வந்த பொழுது எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார்?? அதில் எதைப்பற்றி பேசப்பட்டது என்று அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை பகிரும் DIPR இடம் அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கேட்டோம்.
DIPR இடம் இது சம்பந்தமாக எந்த தகவல்களும் தங்கள் துறையில் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு கூட தெரியாமல் ஒளிவு மறைவுடன் பொது ஊழியர்கள் சந்தித்தார்களா?? அப்படி எந்தெந்த பொது ஊழியர்கள் சந்தித்தனர் ?? அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழல் விசாரணை குறித்து ஏதாவது பேசப்பட்டதா?? FIR பதிவு செய்யாமல் சமரசம் செய்ய ஏதாவது பேசப்பட்டதா?? அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் இன்று வரை ஏன் FIR பதிவு செய்யப்படவில்லை??
மேற்கண்ட கேள்விகளை அறப்போர் இயக்கம் எழுப்பியுள்ளது.
Edited by Mahendran