ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 12 மே 2016 (13:28 IST)

ம.ந.கூ. அறிவித்துள்ள ஒரே ஒரு இலவசத் திட்டம் என்ன? - திருமாவளவன் விளக்கம்

நாங்கள் இலவசங்களை அறிவிக்கவில்லை. ஒரே ஒரு இலவசத்தை அறிவித்துள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
 

 
நேற்று புதன்கிழமை தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு மேடையில் வாக்களிக்க பணம் தரமாட்டோம், பணம் வாங்கவும் மாட்டோம் என்ற உறுதிமொழியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூற, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனர்.
 
பின்னர் பேசிய திருமாவளவன், “மதுக் கடைகளை அதிமுக திமுகவால் மூட முடியாது. எங்களால் மட்டுமே மூட முடியும். மதுக் கைடைகள் மூலமாக கிடைத்த 25 ஆயிரம் கோடியில்தான் ஆயிரம் கோடியை இலவசப்பொருள்களாக வழங்கி வருகின்றன.
 
மேலும் திமுக, அதிமுக இருவருக்குமே மது ஆலைகள் உள்ளன. எனவே அவற்றை அவர்கள் மூட முடியாது. நாங்கள் இலவசங்களை அறிவிக்கவில்லை. ஒரே ஒரு இலவசத்தை அறிவித்துள்ளோம். அதுதான் கல்வி, ஆரம்ப கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரையில் அனைத்துமே இலவசமாக வழங்கப்படும்” என்றார்.