1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (22:35 IST)

கமலின் 3வது அணி முயற்சி என்ன ஆனது?

திமுக, அதிமுக கூட்டணியில் இணையாமல் தனித்து போட்டியிட போவதாக அறிவித்த கமல்ஹாசன் பின்னர் திடீரென ஒத்த கருத்துடையவர்கள் வந்தால் கூட்டணி அமைப்போம் என்றார். கேரள முதல்வர் நல்ல அறிமுகம் என்பதால் அவரது முயற்சியால் டெல்லி சென்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் அவர்களை சந்தித்து கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரகாஷ் காரத், தமிழகத்தில் திமுக கூட்டணி என்பது முடிவாகிவிட்டது தற்போது திடீரென மாற்ற முடியாது என்று கூறிவிட்டதால் கமல் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
 
அதன்பின் பாஜக அளவுகூட தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத ஆம் ஆத்மி கட்சியின் தலைவரை கமல் சந்தித்தார். ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதும் தனித்து போட்டியிடுவதும் கிட்டத்தட்ட ஒன்று என்ற முடிவுக்கு வந்த கமல், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுடனான சந்திப்பு நட்புரீதியானது என்று கூறி ஒருவழியாக சமாளித்தார்.
 
திமுக கூட்டணியில் தேமுதிகவும், ஐஜக அதிமுக கூட்டணியிலும் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதால் கமல் மீண்டும் தனித்து போட்டி என்ற பல்லவியையே பாட வேண்டும் என்பதை தவிர வேற வழியில்லை.