1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (19:54 IST)

நான் ஊருக்கு போய்விட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கி கொண்டதே: குஷ்பு

நான் ஊருக்கு போய்விட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக் கொண்டதே என்று குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


 

தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து நடிகை குஷ்பு தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
இதுகுறித்து அவர் கூறும்போது, நான் இன்றைக்குத்தான் சென்னைக்கு வந்தேன். நான் ஊருக்கு போய்விட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக் கொண்டதே...
 
இதை நினைத்து என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. தமிழ்நாட்டின் இப்போதை நிலை மிகவும் வருத்தத்தை கொடுத்துள்ளது. இன்றைய காலை சந்தோஷமாக அமையவில்லை என்று தெவித்துள்ளார்.