எங்களுக்கு இடையேயான பிரச்சனையை முடித்துக்கொண்டோம்- சூர்யசிவா, டெய்சி பேட்டி

வியாழன், 24 நவம்பர் 2022 (20:07 IST)
தங்களுக்கு இடையேயான பிரச்சனையை பரஸ்பரம் பேசி தீர்த்துக் கொண்டதாக  திருச்சி சூர்ய சிவாவும், டெய்சியும் தெரிவித்துள்ளனர்.

பாஜகவில் நிலவும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, சமீபத்தில்,  பாஜக நிர்வாகி டெய்சிக்கும்,  திருச்சி எம்பி சிவாவின்( திமுக) மகன் சூர்யா சிவாவுக்கும் அவருக்கும் இடையே போனில் வாக்கு வாதம் எழுந்த  நிலையில்,

பாஜகவின் பெண் நிர்வாகியை சூர்யா சிவா மிரட்டியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  அவர் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்தார்.

அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  இந்த விவகாரம் தொடர்பாக இன்று டெய்சியும், சூர்ய சிவாவும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர்.

அதில், சூர்ய சிவா எனக்குத் தம்பி மாதிரி, எங்களுக்கு இடையேயான பிரச்சனையை பேசித் தீர்த்து கொண்டோம். இதனை பெரிது படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் திருச்சி சிவா, அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இதைப் பரப்பி வருகின்றனர். கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்  என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

பெண்களுக்கு ரூ.2500 எப்போது?.. சிடி நிர்மல்குமார் கொடுத்த அப்டேட்!..

பொதுமக்கள் டிஸ்டர்ப் ஆகக்கூடாது!.. காவல்துறைக்கு விஜய் போட்ட உத்தரவு!..

எங்கிட்ட இருந்து எம்.எல்.ஏக்களை தூக்கிட்டாங்க!.. ஆளுநரை சந்திக்கும் பழனிச்சாமி!..

அப்படி திட்டிட்டு விஜய பார்க்க ஏன் போன?!.. கருனாஸை வெளுக்கும் விஜய் ஃபேன்ஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments