முகிலனை தொடர்ந்து தேடுவதாக சிபிசிஐடி தகவல்

திங்கள், 18 மார்ச் 2019 (17:39 IST)
டிஎஸ்பி தலைமையில் 17 தனிப்படைகள் அமைத்து 251 சாட்சிகளிடன் விசாரணை செய்து வருவதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
 
முகிலனை மீட்கக்கோரி ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ளோம். விசாரணை சரியான திசையில் செல்கிறது என்று சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 9 பக்க அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
 
அதில்  முகிலன் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்று சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

மனசு கஷ்டமா இருக்கு!.. அதிமுக ஒன்னு சேரணும்!.. அதிமுக நிர்வாகி தற்கொலை!..

இப்பதான் ஆர்.பி.ஐ ரூல்ஸ் தெரியுதா?!.. என்னா ஏமாத்துறீங்களா?!.. தங்கம் தென்னரசு ஆவேசம்..

பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம்!.. வெளுத்து வாங்கிய அமீர்!...

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!.. பொதுமக்கள் ஷாக்...

திருச்சியில் விஜய்!.. QR கோட் கட்டாயம்!.. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!..

அடுத்த கட்டுரையில்
Show comments