செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (15:49 IST)

காட்டுமிராண்டிகளை அழிக்க உறுதியேற்போம் – ஹெச்.ராஜா

தமிழகத்தில் சில நாட்களாக பெரும் பரவலாகப் பேசப்படும் கந்த சஷ்டி கவசம் சர்ச்சை விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் புதுச்சேரி போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
 
சில நாட்களுக்கு முன் சமூக வலைதளமான யூடியுப்பில் கறுப்பர்கூட்டம் என்ற சேனலில் முருகக் கடவுளின் கந்த சஷ்டி பற்றி ஆபாசமாக கருத்துக் கூறியிருந்தனர்.
 
இதுகுறித்து அரசியல தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்ரனர். இந்நிலையில் நேற்று முன் தினம்  கறுப்பர் கூட்டம் சேனலின் உரிமையாள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று அந்த யூடியுப்பைச் சேர்ந்ந்த சுரேந்த என்பவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். 
 
இந்நிலையில், பலரும் மத ரீதியாக இழிவு படுதியவர்களைத் தண்டிக்க வேண்டுமென கூறி குரல் எழுப்பி வருகின்றனர்.
 
இதுகுறித்து பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்,
 
’’கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி, நம்புபவன் முட்டாள், பரப்புபவன் அயோக்கியன் என்று எவரேனும் சொன்னால் அப்படி சொல்பவர்களை காட்டுமிராண்டி, முட்டாள், அயோக்கியன் என்று நாமும் சொல்லலாம் அல்லவா. எனவே ஆன்மீகவாதிகள் அனைவரும் நாத்திக காட்டுமிராண்டிகளை அழிக்க உறுதியேற்போம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.