சாத்தான்குளம் போலிஸ் ஸ்டேஷன் மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டில் ? நீதிமன்றம் உத்தரவு!
வருவாய் துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் போலிஸார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமானவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஒருமித்த குரல் எழுந்துள்ளது.
இப்போது வழக்கு சிபிசிஐடி போலிஸார் கைவசம் உள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதையடுத்து காவல் நிலையத்தில் விசாரணை மற்றும் தடவியல் நிபுணர்களின் சோதனைகள் நடந்து முடிந்துள்ளன. இதனால் மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் அந்த ஸ்டேஷனை மாற்றும்படி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன.
160 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக காவல்துறை வருவாய் துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.