புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜனவரி 2020 (15:10 IST)

தமிழகத்தில் 242 பேர் கண்காணிப்பு... கொரோனா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம் - விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்மி  எனவும் பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : சீனாவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள 242 பேர் தனிப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 
 
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை; கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என தெரிவித்தார்.
 
இந்நிலையில் கொரோனா பரவியுள்ள சீனாவில் இருந்து இந்தியர்களை மீட்க இரண்டாவது முறையாக இந்தியா விமானத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.