தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் விவிஎஸ் லட்சுமணன்! – கங்குலி தகவல்!
இந்தியாவின் தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரில் இருந்து செயல்பட்டு வரும் தேசிய கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக முன்னதாக ராகுல் ட்ராவிட் இருந்து வந்தார். தற்போது ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் காலியாக தேசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருக்கான பதவியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லெட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார்.