வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (07:27 IST)

மே 2ஆம் தேதி நள்ளிரவுக்குள் முடிவுகள்: சத்யபிரதா சாகு அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளுக்கும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுமூகமாக நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது மூடி சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மே இரண்டாம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மே இரண்டாம் தேதி காலை எட்டு முப்பது மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம் என்றும் அன்றைய தினம் நள்ளிரவுக்குள் அனைத்து முடிவுகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் 
 
மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு சில கட்டுப்பாடுகள் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் அந்தக் கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடித்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்