வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (22:05 IST)

நாளை கமல்-விஷால் சந்திப்பு: பிரச்சாரம் செய்வாரா?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷாலின் வேட்புமனு ஒருவழியாக ஏற்கப்பட்டுள்ளதால் விஷாலும் தற்போது களத்தில் உள்ளார். இரண்டு பாரம்பரியமான திராவிட கட்சிகளை கதிகலங்க வைத்தபோதே விஷால் பெயரளவில் வெற்றி பெற்றுவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் நாளை கமல்ஹாசனை சந்திக்கவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன், விஷாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா? என்பது குறித்து தெரியவரும்

மேலும் 'மக்களுக்கு நல்லது செய்வதற்கு இடையூறு வரும் என தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஆனால் இவ்வளவு பிரச்னை வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் விஷால் கூறியுள்ளார். மேலும் கமல் கூறி தான் போட்டியிடவில்லை என்றும் ,ஆர்கேநகர் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணம்தான் தான் போட்டியிடுவதற்கு காரணம் என்றும் விஷால் மேலும் கூறினார்.