செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (21:31 IST)

நேர்மை, நீதி, நியாயத்திற்கு வெற்றி: விஷால் பேட்டி!!

நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மனுவை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதன் பின்னணியில் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். இதன் பின்னர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. 
 
ஆர்கே.நகர் தேர்தலில் தன்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதால் நடிகர் விஷால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேசினார், முதலில் நான் சொல்ல விரும்புவது நேர்மை, நியாயம் நீதி வென்றுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தேர்தல் அதிகாரிகளின் பரிசீலனைக்காக காத்திருந்தோம், தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துள்ளார். மக்களக்கு நல்லதையே நினைப்போம். இரண்டு கையெழுத்து போலி என்று சொல்லி புகார் இருந்தது விசாரணை நடத்திய பின்னர் அதில் உண்மை இல்லை என்பது தெரிந்த பின்னர் என்னுடைய மனு ஏற்கப்பட்டுள்ளது. 
 
யார் எதிர்க்கிறார்கள், குற்றம்சாட்டுகிறார்கள் என்றெல்லாம் நான் ஆராய விருப்பப்படவில்லை. நான் ஆர்கே நகர் தேர்தலில் மக்களை சந்தித்து மக்களுக்காக நல்லது செய்வேன். நேர்மையாக தேர்தலை சந்திக்க உள்ளேன். 
 
நல்லது நடக்கும் போது தடைகள் வரும் அதையெல்லாம் கடந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி நாளை முதல் ஆர்கே நகர் தேர்தல் களத்தில் சந்திப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.