திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 6 மே 2018 (15:06 IST)

நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்: விஷால் டுவீட்

நீட் தேர்வு எழுத தனது மகனை கேரளா அழைத்துச் சென்று மரணமடைந்த கிருஷ்ணசாமிக்கு நடிகர் விஷால் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுதும் மையம் தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில் மகனை நீட் தேர்வு எழுத கேரளா அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
 
இந்த மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
 
அந்த பதிவில்,
 
தந்தையை பறிகொடுத்த கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நமது கடமை. இதற்காக அவருக்கு உதவிகள் செய்யத் தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.