வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (15:11 IST)

பேய் பயத்தில் மூழ்கிய கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தில் கனமழையால் மரம் ஒன்று சாய்ந்துள்ளது. அதை காரணம் காட்டி இரவு முழுவதும் அந்த கிராம மக்கள் பேய் பயத்தில் மூழ்கி இருந்துள்ளனர்.


 

 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள புதுப்பட்டு கிராமத்தில் நேற்று கனமழை பெய்துள்ளது. அந்த கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வேப்பமரம் ஒன்று சில தினங்களுக்கு முன் மழையால் சாய்ந்துவிட்டது. 
 
அந்த மரத்தை அகற்றச் சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பேய் பீதியில் உள்ளனர். இரவு முழுவதும் அந்த கிராம மக்கள் தங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டு பயத்தில் தவித்துள்ளனர்.