Daily Horoscope

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Written By Mahendran
Updated: செவ்வாய், 11 ஜூன் 2024 (15:39 IST)
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்த நிலையில் திமுக வேட்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது 
 
விக்கிரவாண்டி தொகுதிகள் எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி என்பவர் திடீரென காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமல் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக வேட்பாளர் குறித்த பரிசு இல்லை நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா என அறிவிக்கப்பட்டது.  விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா பெயர்கள் பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அன்னியூர் சிவா என்பது தற்போது உறுதி செய்யப்பட்டது.
 
மேலும் மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவியும் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
 
Edited by Mahendran
 
 

எல்லாம் காட்டு

ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ரிலீஸ் எதிரொலி.. வெறும் ரூ.69,990க்கு ஐபோன் 17 ப்ரோ.. எப்படி வாங்குவது?

இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டால் வாபஸ் பெறுவோம்.. திரிணமூல் அதிருப்தி அணி அறிவிப்பு...

வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லையென்றால், அதே மொழியில் பதில் சொல்வோம்: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. இன்று ஒரே நாளில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்...

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்த பாகிஸ்தான்.. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாத ஆசை...

அடுத்த கட்டுரையில்
Show comments