திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2022 (16:22 IST)

பெற்றோரிடம் மனம் விட்டு பேசுங்கள்: மாணவி தற்கொலை குறித்து விஜயகாந்த் அறிவுரை

vijayakanth
மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் மனம் விட்டு பேச வேண்டும் என மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மாணவ மாணவிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவ மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாணவர்கள் அதனை மனதில் வைத்துக் கொள்ளாமல் பெற்றோரிடமும் அல்லது ஆசிரியரிடம் மனம் விட்டு பேசுங்கள் என்றும் அப்போது தான் அதற்கு உரிய தீர்வு காண முடியும் என்றும் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்
 
அவ்வாறு மனம் விட்டு பேசினால்தான் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் உங்களை விட்டு உடனே நீங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் மனதை உறுதியோடு வைத்துக்கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார்