திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2017 (19:16 IST)

நாளை காதலர் தினம்: இந்து முன்னணியினர் எச்சரிக்கை

நாளை காதலர் தினத்தையொட்டி பொது இடங்களில் அத்துமீறும் காதலர்களுக்கு அதே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என வேலூர் இந்து முன்னணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

 
நாளை காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாட தயராகி வருகின்றனர். நாளை காதலர்கள் ஒன்றாக சேர்ந்து வெளியே செல்வது வழக்கமான நிகழ்வு. அதேபோல் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பது இந்து முன்னணியினரின் வழக்கமான செயல்.
 
பொது இடங்களில் நாளை காதலர்கள் அத்துமீறும் செயலில் ஈடுப்பட்டால், அதே இடத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என வேலூர் இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
 
பொதுவாக வடமாநிலங்களில் காதலர் தினத்துக்கு இந்துத்துவ குழுவினர் எதிர்ப்பு தெரிவிப்பது உண்டு. சாலையில், பொது இடங்களில் காதலர்கள் ஒன்றாக இருப்பதை கண்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது பொனற காரியங்களில் ஈடுப்படுவது வழக்கம். இந்த முறையில் அவர்கள் காதலர்கள் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
காதலர் தினத்தை கண்டித்து வேலூர் இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
 
காதலர் தினத்தன்று பொது இடங்கள், கோவில்கள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் காதலர்கள் அத்துமீறி நடந்து கொண்டால் அதே இடத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். அவர்கள் பற்றிய விவரங்கள் போஸ்டராக அடித்து ஒட்டப்படும். காதலர் தினம் என்பது நமது தமிழ் பண்பாட்டுக்கு தமிழக அடையாளத்துக்கு உகந்தது அல்ல. இந்து முன்னணி காதலர்களுக்கு எதிரி அல்ல. காதலர் தின கொண்டாட்டத்தைதான் கண்டிக்கிறோம், என்று தெரிவித்துள்ளனர்.