1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (10:47 IST)

சேலத்தில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி! – பீதியில் மக்கள்!

Shawarma
தரமற்ற ஷவர்மா உணவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சேலம் உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு இறந்ததை தொடர்ந்து தமிழகத்தில் அவ்வாறான சில உடல்நல பாதிப்புகள் கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை நடத்தியபோது 19 ஓட்டல்களில் இருந்து 113 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததற்காக 8 கடைகளுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.