வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (10:27 IST)

எக்கசக்கமாக எகிறிய காய்களின் விலை... ஆறுதல் தரும் தக்காளி!

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைவால் காய்கறிகளின் விலை எக்கசக்கமாக உயர்ந்துள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்தது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 
 
சின்ன வெங்காயம் ரூ.60 இருந்து ரூ.70 ஆகவும், ஊட்டி கேரட் ரூ.65 இருந்து ரூ.70 ஆகவும், முருங்கைக்காய் ரூ.170 இருந்து ரூ.260 ஆகவும், அவரைக்காய் ரூ.60 இருந்து ரூ. 70 ஆகவும்,  கத்தரிக்காய் ரூ.90 இருந்து ரூ.100 ஆகவும், ஊட்டி பீட்ரூட் ரூ.90 இருந்து ரூ.100 ஆகவும், வெண்டைக்காய் ரூ.60 இருந்து ரூ.80 ஆகவும் உள்ளது. 
 
மேலும் சவ்சவ் ரூ.20 இருந்து ரூ.25 ஆகவும், பாவக்காய் ரூ.50 இருந்து ரூ.60 ஆகவும், சுரைக்காய் ரூ.25 இருந்து ரூ.35 ஆகவும், பட்டாணி ரூ.30 இருந்து ரூ.40 ஆகவும், இஞ்சி ரூ.25 இருந்து ரூ.45 ஆகவும், பூண்டு ரூ.90 இருந்து ரூ.150 ஆகவும், பீர்க்கங்காய் ரூ.50 இருந்து ரூ.60 ஆகவும் உயர்ந்து உள்ளது. 
 
இதில் ஆறுதல் தரும் வகையில் தக்காளி கிலோ ரூ.100 இருந்து ரூ.30க்கு விற்பனை செய்யப்படுவது தான்.