வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (18:36 IST)

தள்ளுவண்யுடன் காய்கறிகள் வழங்கி... ரத்ததானம் செய்த எம்.பி.கனிமொழி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் 72 பேர்கள் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 1755 பேர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வறுமையில் வாடும் மூன்று நபர்களுக்கு தள்ளு வண்டியுடன் காய்கறிகளையும் இலவசமாக வழங்கி தூத்துக்குடி எம்.பி.கனிமொழி உதவி செய்தார்.

மேலும், சென்னை ஓட்டேரியில், ரத்ததான முகாமை தொடங்கி வைத்த எம்.பி,கனிமொழி ரத்த தானம் செய்தார்.