1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2018 (16:10 IST)

வீரப்பன் இந்நேரம் இருந்திருந்தால்.........புதிய இயக்கத்தை தொடங்கிய முத்துலட்சுமி

வீரப்பனின் 66வது பிறந்தநாளான இன்று அவரது மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

 
சந்தனமரம் கடத்தல் வீரப்பன் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநில காவல்துறையினரின் தூக்கத்தை கெடுத்தவர். 2004ஆம் ஆண்டு விஜயகுமார் தலைமையில் சிறப்பு அதிரடி படை தலைமையில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். 
 
இன்று வீரப்பனின் 66வது பிறந்தநாள் விழா சேலத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். 
 
தற்போது வீரப்பன் இருந்திருந்தால் கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது. வீரப்பன் இருந்த வரை தமிழரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது என்று முத்துலட்சுமி கூறியுள்ளார்.