செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2016 (09:47 IST)

விஷாலுக்கு இச்சு இச்சு என முத்தம் கொடுத்த வரலட்சுமி!

விஷாலுக்கு இச்சு இச்சு என முத்தம் கொடுத்த வரலட்சுமி!

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்கி தன்னுடைய 38-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடினார் நடிகர் விஷால்.


 
 
சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியை விஷால் திருமணம் செய்து கொள்ள இருப்பது ஊரே அறிந்த கதை. தன்னுடைய காதலரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூடவே இருந்தார் வரலட்சுமி.
 
திரையுலகினர், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தாலும் காதலி வரலட்சுமியின் பிறந்த நாள் வாழ்த்தில் விஷால் ரொம்பவே குஷியாகிவிட்டார்.
 
வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில், கிரேஸி மற்றும் என் வாழ்வின் காதலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்… உம்மா என்று பதிவிட்டுள்ளார்.
 
டுவிட்டரில் விஷாலுக்கு வரலட்சுமி உம்மா கொடுத்தது, அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்பதை உறுதி செய்வதாக கோடம்பாக்க குருவிகள் பேசிக்கொள்கின்றன.