ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:38 IST)

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை.. என்ன காரணம்?

வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கனரக வாகனங்கள் மேற்குறிப்பிட்ட நேரத்தில் செல்லக்கூடாது என்றும் தாம்பரம் மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வண்டலூர் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள சாலைகளில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் தான் மேற்குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தடையை மீறி கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva