செந்தில் பாலாஜிக்கு சிறந்த சிகிச்சை வேண்டும் என்றால் எய்ம்ஸ்-க்கு அனுப்புங்கள்: வானதி சீனிவாசன்
செந்தில் பாலாஜிக்கு சிறந்த சிகிச்சை தர தமிழக மருத்துவமனைகளில் முடியவில்லை என்றால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்புங்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்தில் பாலாஜியை பார்த்தால் பாவமாகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் ஒரு அமைச்சருக்கு கூட சிறையில் உணவு மருத்துவ வசதிகள் சரியாக இல்லை என்பதால் தான் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது என்றும் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவமனை தயாராக இருக்கிறது என்றும் அவரை அங்கு அனுப்புங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு மனிதாபிமானத்தின் அடிப்படையில் வருத்தமாக உள்ளது என்றும் ஒருவேளை சிறைத்துறை அவரை சரியாக கவனிக்கவில்லையா? என்றும் தமிழக அரசின் கண்காணிப்பில் தானே அவர் இருக்கிறார் என்றும் கேட்டார்.
தமிழக அரசு அவருக்கு சிறந்த மருத்துவத்தை உடல் நிலையை கவனிக்க முடியாவிட்டால் மத்திய அரசின் உதவியை நாடலாம் என்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு கூட அவரை அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva