Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் என்று பெயரை மாற்ற தயாரா?வானதி சீனிவாசன்

Written By Siva
Updated: திங்கள், 9 ஜனவரி 2023 (18:36 IST)
தமிழ்நாடு என்ற சொல் தான் தங்களுக்கு பிடித்த சொல் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரை தமிழ் நாடு முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்ற தயாரா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சட்டசபையில் இன்று தமிழ்நாடு என்ற வார்த்தைகளை ஆளுநர் படிக்கவில்லை என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் கவர்னருக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார். 
 
தமிழ்நாடு என்பது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுகவினருக்கு விருப்பமானது என்றால் கட்சி பெயரை தமிழ் நாடு முன்னேற்ற கழகம் என்று மாற்ற தயாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மேலும் திராவிட மாடல் என்பதை தமிழ்நாடு மாடல் என்றும் சொல்ல தயாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்விக்கு திமுகவினர் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தடை செய்யப்பட்ட பான் மசாலாவுக்கு விளம்பரம்... ஷாருக்கான் உள்பட பிரபலங்களுக்கு நோட்டீஸ்..

மம்தா ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்தவர் தூக்கில் தொங்கி தற்கொலை? அதிர்ச்சியில் மேற்குவங்க மக்கள்..

மானை வேட்டையாடிய 3 பேரை என்கவுண்டர் செய்த வனத்துறை!....

அம்மாவ கேட்டாதான் அப்பா யாருன்னு தெரியும்!.. நயினார் நகேந்திரன் சர்ச்சை பேச்சு!...

தளபதி விஜய் சாலை!. முதல்வருக்கு வேறமாறி நன்றி சொன்ன கிராம மக்கள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments