தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக பா. வளர்மதி நியமனம்
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றார்.
முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, தற்போது அதிமுக இலக்கிய அணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.