திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (19:20 IST)

ஜூன் 21 முதல் தடுப்பூசி இலவசம்- மோடி அறிவிப்பு

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இத்தொற்றைக் குறைக்க மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பாரத பிரதமர் மோடி,  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

தடுப்பூசி விநியோகத்திற்காக மாநில அரசுகள் 25% பங்கையும் மத்திய அரசே ஏற்கும் எனவும், இனிமே கொரோனா தடுப்பூசிக்காக மாநில அரசுகள் செலவு செய்யத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

.இதற்கு நன்றி தெரிவித்து கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.