ரூ.700 கோடிக்கு கைமாறுகிறது சென்னை லீலா பேலஸ் ஹோட்டல்?
சென்னையில் உள்ள ஐந்து ஸ்டார் ஓட்டல்களில் ஒன்றான லீலா பேலஸ் ஓட்டலை அமெரிக்காவை சேர்ந்த மேரிகோல்ட் நிறுவனம் ரூ.700 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவின் பல நகரங்களில் இயங்கி வரும் லீலா பேலஸ் ஹோட்டல்களில், சமீபத்தில் கோவா லீலா பேலஸ் ஓட்டல் ரூ.725 கோடிக்கு விற்பனையானது. இந்த ஹோட்டலை மலேசிய நிறுவனம் ஒன்று வாங்கியது.
இந்த நிலையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள லீலா பேலஸ் ஓட்டலை அமெரிக்காவை சேர்ந்த மேரிகோல்ட் நிறுவனம் விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளது. ரூ.700 கோடிக்கு இந்நிறுவனம் வாங்கவுள்ள இந்த ஹோட்டலில் 326 சொகுசு அறைகள் உள்ளன.