வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2017 (17:17 IST)

மாணவியை சீரழித்த மாமா: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்!

மாணவியை சீரழித்த மாமா: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்!

சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மணிமாலா என்ற மாணவியை அவரது மாமா சரவணன் என்பர் பலாத்காரம் செய்ததும், இதனை தொடர்ந்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சரவணன் நெற்குன்றத்தில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் சசிகலா. சசிகலாவின் அண்ணன் மகள் மணிமாலா அத்தை வீடு என்ற முறையில் அங்கு சென்று வந்துள்ளார்.
 
இந்நிலையில் ஆறு மாதத்திற்கு முன்னர் தனது அத்தை வீட்டுக்கு சென்ற மணிமாலாவுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார் அவரது மாமா சரவணன். பின்னர் இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளார் சரவணன்.
 
ஆனாலும் அந்த மாணவி மிரட்டலுக்கு பயப்படாமல் தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். ஆனால் மாணவியின் தந்தை பழனிவேல் அதனை தங்கையின் கணவர் என்பதால் தட்டிக்கேட்காமல் விட்டுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மணிமாலா கடந்த 29-ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
மாணவி தீக்குளிக்கும் முன்னர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், தன்னை அத்தையின் கணவர் சரவணன் பாலியல் பலாத்காரம் செய்தார். தன்னுடைய ஆபாச படங்கள் இருப்பதாக கூறி உடலுறவு கொள்ள வற்புறுத்தினார். அத்தை சசிகலாவும் தன்னை மிரட்டினார். இதனால் தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார்.
 
இதனையடுத்து மாணவியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர், தலைமறைவான சரவணனை கைது செய்வதற்கான ஆவணம் இருப்பதாக காவல்துறை கூறிய பின்னர் தான் அவர்கள் கலைந்து சென்றனர்.