உடுமலை ஆணவ கொலை: இணையத்தில் பரவும் கொலையாளிகள் புகைப்படம்
உடுமலை ஆணவ கொலை: இணையத்தில் பரவும் கொலையாளிகள் புகைப்படம்
இரு தினங்களுக்கு முன்பு உடுமலை அருகே இளம் காதல் தம்பதியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தேறியது. அரிவாளால் பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதலில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனங்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணமாக அவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என காவல் துறை அறிவித்தது.
இந்நிலையில் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கைது செய்யப்பட்ட ஆணவ கொலையாளிகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் ஜட்டியுடன் நிற்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.