வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (21:33 IST)

இன்று உதயநிதி எம்.எல்.ஏவிடம் நிதியுதவி செய்த பிரபலங்கள்:

இன்று உதயநிதி எம்.எல்.ஏவிடம் நிதியுதவி செய்த பிரபலங்கள் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்-கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ராமகிருஷ்ணன்
அவர்களின் மகன் வசந்தன் அவர்கள் தன்னுடைய NMR Plantations சார்பில் கல்வி மற்றும் மருத்துவ பணிக்காக திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி.
 
கல்வி மற்றும் மருத்துவ சேவைப்பணிகளுக்காக திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மகாராஜன் அவர்களின் மகன் சேதுராஜா அவர்கள் தன்னுடைய AMR Construction சார்பில் ரூ.2 லட்சத்திற்கான வரைவோலையை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
கழக அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தொழிற்பயிற்சி பழகுநர்கள் ரூ.45,000-ஐ மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்