புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:50 IST)

வீடுவீடாக சென்று தடுப்பூசி: உதயநிதியின் சூப்பர் ஏற்பாடு!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டின் படி தெருத்தெருவாக வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது 
 
இதுகுறித்து அந்த தொகுதி மக்கள் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் சென்று அங்கு தடுப்பூசி போடாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் காட்சிகள் உள்ளன
 
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டில் வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதற்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது