பிரபல பத்திரிகைக்கு ஆயுள்சந்தா கட்டிய உதய நிதி ஸ்டாலின்!
நீதிக்கட்சியால் தோற்றுவிக்கப்பட்டு, பின், பகுத்தறிவுப் பகலவன் என்று அழைக்கப்படும் தந்தை பெரியாரால் கடந்த 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது விடுதலை நாளிதழ்.
இந்த நாளிதழ் அப்போது முதல் இன்று வரை தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பெரியார் மறைவுக்குப் பின், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி ஆசிரியராக இந்த பத்திரிக்கையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இந்த நாளிதழின் ஆயுட்கால சந்தாவாக உதய நிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் அண்ணன் அன்புராஜிடம் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், பகுத்தறிவு,சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியைத் தொய்வின்றிச் செய்து வரும் @viduthalainews
-க்கு எனது சிறு பங்களிப்பாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஆயுள் சந்தாவாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் அன்புராஜ் அவர்களிடம் இன்று வழங்கினேன். வாழ்க பெரியார்!என்று தெரிவித்துள்ளார்.
Edited By Sinoj