1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (13:14 IST)

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

19 வயது பெண்ணை இரு இளைஞர்கள் ஒரே நேரத்தில் காதலித்த நிலையில் இந்த முக்கோண காதல் கொலையில் முடிந்த சம்பவம் ஈரோடு அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் சேர்ந்த சேது மணிகண்டன் மற்றும் குகநாதன் ஆகிய இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை காதலித்ததாக தெரிகிறது
 
முதலில் சேது மணிகண்டன் அந்த பெண்ணை காதலித்ததாகவும் அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து குகநாதன் அதே பெண்ணை காதலித்து வந்த நிலையில், தான் காதலித்த பெண்ணை நீ காதலிக்க கூடாது என்று சேது மணிகண்டன் குகநாதனை மிரட்டியதாக தெரிகிறது.
 
இது குறித்து இருவருக்கும் மேற்பட்ட தகராறொ; திடீரென குகநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து  சேது மணிகண்டனை சரமாரியாக குத்திய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதனை அடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து லிகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பெண்ணை இரண்டு இளைஞர்கள் காதலித்த நிலையில் இந்த முக்கோண காதல் கொலையில் முடிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva