பிரதமர் தாயாரைப் பற்றி அவமரியாதையாக டுவீட் - சவுக்கு சங்கர் மீது புகார்
பிரதமர் தாயாரைப் பற்றி அவமரியாதையாக டுவீட் பதிவிட்ட சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐந்து மா நில தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், உ . பி., உத்ரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மா நிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து, பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள தன் தாயாரைச் சந்தித்தார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
இதற்கு பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், மோடியின் தாயாரைப் பற்றி அவமரியாதையாக டுவீட் பதிவிட்டார்.
இது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பிரபல வழக்கறிஞர் அசோக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவுக்கு சங்கர் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
நம் பாரதப் பிரதமர் அவர்களின் தாயாரைப் பற்றி அவமரியாதையான வார்த்தைகளை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவுகளை மேற்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த சங்கர் என்கிற சவுக்கு சங்கர் என்ற நபரின் மீது நடவடிக்கை எடுக்க எனத் தெரிவித்துள்ளார்.