1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (13:48 IST)

சட்டமன்ற தோல்வியை விடுங்க.. உள்ளாட்சி தேர்தலை புடிங்க! – அமமுகவினருக்கு டிடிவி தினகரன் அறிக்கை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமமுக கட்சி தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரித்து உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “காலத்தையும், காட்சிகளையும் மாற்றும் சக்தி நமக்குண்டு! நம் வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது; யாராலும் அதனை மொத்தமாக தடுத்துவிட முடியாது! - புதிய பொலிவோடும், வலிவோடும் முன்பைவிட வேகமாக செயல்படுவோம்! 9 மாவட்ட உள்ளாட்சித்தேர்தல்- மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களுக்குத் தயாராவோம்!” என்று தெரிவித்துள்ளார்.