வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (15:38 IST)

ஆளக் காணோம்.... சட்டசபை பக்கம் தலைக்காட்டாத டிடிவி தினகரன்!!

தமிழக சட்டசபைக்கு இன்று டிடிவி தினகரன் வரவில்லை என்பதால் அவர் ஏன் வரவில்லை என சில விளக்கங்கள் வெளியாகி வருகிறது. 
 
ஜூலை ஒன்றாம் தேதி முதல் தமிழக சட்டசபை தினமும் கூடி வருகிறது. மக்கள் பிரச்சனைகள் விவாதிக்க படுகின்றன. இந்நிலையில் இன்று சட்டசபை பக்கம் தினகரனை பார்க்க முடியவில்லை.
 
உடனே, கட்சியில் இருந்து அனைவரும் விலகுவதால் டிடிவி தினகரன் மன உலைச்சலில் இருக்கிறார் எனவேதான் அவர் வரவில்லை என கூறப்பட்டது. ஆனால், அவர் சசிகலாவை சந்திக்க பெங்களூர் சென்றதால் வரவில்லை என தெரிகிறது. 
சசிகலா சந்தித்த பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியது பின்வருமாறு, அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை. அவர்கள் நிர்வாகிகள்தான். எனவே, கட்சிக்கு அவர்கள் சென்றதால் எந்த பிரச்சனையும் இல்லை. 
 
மேலும், அதிமுகவுக்கு போக முடிவு எடுத்த பிறகுதான் அமமுகவில் இருந்து விலகியுள்ளார் இசக்கி சுப்பையா என தெரிவித்தார். குறுகிய காலத்தில் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோர் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.