1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (00:41 IST)

டிடிவி தினகரன் கைது: டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் சற்று முன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் தினகரன் தரப்பினர் பரபரப்பில் உள்ளனர்.



 


இந்த வழக்கு தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக டி.டி.வி.தினகரனிடம்  தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரங்கள் இருந்ததால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தினகரனுடன் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வழக்கில் முக்கிய பங்கு வகித்த டிடிவியின் உதவியாளர் ஜனா என்கிற ஜனார்த்தனம், சாட்சியாக வழக்கில் சேர்க்கப்படுவார் என்றும் கூடுதல் தகவல்.