வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2024 (11:14 IST)

இது நம்ம காலம்.. எறங்கி ஆடு கபிலா! ட்ரம்ப் வெற்றியால் எகிறிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!

Elon musk Trump

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

 

 

அமெரிக்காவில் ஜனாதிபதிக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பும், கமலா ஹாரிஸும் போட்டியிட்ட நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றிக்காக ஆரம்பம் முதலே அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர்களில் ஒருவர் உலக தொழிலதிபர் எலான் மஸ்க்.

 

தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து டொனால்டு ட்ரம்ப்க்கு ஆதரவாக பதிவிட்டு வந்த அவர், ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்துக்காக சுமார் 1000 கோடியை செலவிட்டுள்ளார். இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது தொடங்கி எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.
 

 

முன்னதாக 260 பில்லியன் டாலரில் இருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு நேற்று ஒரு நாளைக்குள் 20.5 பில்லியன் டாலர் அதிகரித்து 285.2 பில்லியன் டாலாராக உயர்ந்துள்ளது. எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 7.73 சதவீதமும், அவரது நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 13 சதவீதமும் உயர்ந்துள்ளது.

 

முன்னதாக ஜோ பைடன் வெற்றி பெற்றபோது ட்விட்டர் தளத்தில் டொனால்டு ட்ரம்பின் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், ட்விட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய எலான் மஸ்க், உடனடியாக ட்ரம்ப்பின் முடக்கப்பட்ட கணக்கையும் மீட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ட்ரம்ப், தான் மீண்டும் அதிபரானால் எலான் மஸ்க்கிற்கு கேபினேட் பதவி அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K