1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (07:46 IST)

இரண்டாவது நாளாக நீடிக்கும் வேலைநிறுத்தம்: குறைந்த பேருந்துகளே இயக்கப்படுவதால் மக்கள் பாதிப்பு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் நேற்று சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் குறைந்த அளவு பேருந்துகளை இயக்கப்பட்டது. அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களை வைத்து குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து பற்றாக்குறை காரணமாக மக்கள் பாதிப்பில் இருந்தனர் 
 
இருப்பினும் சென்னையை பொருத்தவரை மெட்ரோ ரயில், மின்சார ரயில், ஷேர் ஆட்டோ ஆகிய வசதிகள் இருப்பதால் பெரிய பாதிப்பு தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பேருந்துகள் வழக்கத்தைவிட குறைந்த அளவு இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்படைந்தனர் 
 
இதுகுறித்து உடனடியாக இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது