ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (11:32 IST)

தவெக மாநாடு எதிரொலி: மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும் வாகனங்கள்..!

chennai traffic
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதை அடுத்து, சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருப்பதை முன்வைத்து, இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நிற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
இந்த நிலையில், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் இடையூறு இன்றி பயணம் செய்ய போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக விழுப்புரம் நோக்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோல, சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரா வாகனங்கள் திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், வடலூர் வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இதேபோல, திருச்சியிலிருந்து சென்னை வரும் வாகனங்கள் விழுப்புரத்திலிருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாகவும், கும்பகோணத்திலிருந்து சென்னை வரும் வாகனங்கள் பண்ருட்டி, கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழியாகவும் திருப்பிவிடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva