இன்று தமிழக பட்ஜெட்: 10 மாத ஆட்சியின் பலன் கிடைக்கும் என தகவல்!
இன்று தமிழக பட்ஜெட்: 10 மாத ஆட்சியின் பலன் கிடைக்கும் என தகவல்!
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை அடுத்த பத்து மாத திமுக ஆட்சியில் பலன் இன்று கிடைக்கும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது
இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள காகிதமில்லா பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 10 மாத கால திமுக ஆட்சியின் பலன்கள் வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்த பட்ஜெட்டிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது