இன்னும் 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இன்று கீழ்கண்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல்
மேலும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
Edited by Siva