வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 நவம்பர் 2021 (07:50 IST)

15% கச்சா எண்ணெய் விலை குறைந்தும் குறையாத பெட்ரோல், டீசல் விலை!

சர்வதேச சந்தையில் 15% கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் இருப்பது அதிர்ச்சி தருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
கடந்த 24 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதன் காரணமாக இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 15 சதவீதம் குறைந்து இருப்பதாகவும் ஆனால் அதன் பயனை மத்திய அரசு பொது மக்களுக்கு தராமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது