வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 மே 2022 (07:17 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் நிலவரம்

petrol
மத்திய அரசு திடீரென பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தால் சென்னையில் பெட்ரோல் விலை 8 ரூபாயும் டீசல் விலை 6 ரூபாயும் குறைந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் மாநில அரசும் அதேபோல் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை 100க்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநில அரசு இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது