திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (15:21 IST)

இன்று அன்னையர் தினம் : திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து

இன்று நம் தேசத்தில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பல தலைவர்கள் தம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் தனது தாயார் தயாளு அம்மாளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளாதாவது :
நீரின்றி மட்டுமல்ல தாயின்றியும் அமைவதில்லை உலகு!
 
மனித உயிரினத்தின் பிறப்பு வடிவமே தாய் தான். அன்பு, கருணை, நேசம் ஆகிய உயரிய குணங்களுக்கு உயிர் உதாரணம் காட்ட வேண்டுமானால் அதுவும் தாய் தான். தனது ரத்தத்தை பாலாக்கித் தந்து உலகுக்கு உயிர்களைக் கொடுப்பவளும் தாயே! அதனால் தான் தன்னலம் கருதாத உள்ளத்தை தாயுள்ளம் எனப் போற்றுகிறோம். சுமந்து பெற்று, சோர்வின்றி வளர்த்து, துன்பங்களைத் தனதாக்கி இன்பங்களைப் பிள்ளைகளுக்கு வழங்கும் அன்னையர் அனைவரையும் நாம் எந்நாளும் வணங்க வேண்டும்.
 
தாய்த்திருநாளாம் இந்நாளில் எனை ஈன்ற தாயாம் தயாளு அம்மாளின் கருணை பொங்கிய காலடிகளைத் தொட்டு வணங்குகிறேன்.
 
பெற்ற தாய்மார்க்கும், பெறாத நிலையிலும் ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கும் பேருள்ளம் பெற்ற தாய்மார்க்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாரு பதிவிட்டுள்ளார்.