செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 மே 2019 (11:04 IST)

ஸ்டாலின் , துரைமுருகன் உறவில் விரிசல் – பறிபோகிறதா பொருளாளர் பதவி !

திமுக வின் முக்கியத்தூண்களில் ஒருவரான துரைமுருகனுக்கும் திமுக தலைமைக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி மற்றும் அவரது ஆதரவளரான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் கொடவுன் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்துக்கு இது சம்மந்தமான தகவல்களை ஏப்ரல் 3 ஆம் தேதி அளித்தது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் படி குடியரசுத்தலைவர் வேலூர்த் தொகுதி தேர்தலை ரத்து செய்தார்.

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மற்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் குறித்து திமுக மகிழ்ச்சியாக இருந்தாலும், வேலூர் தொகுதி விஷயத்தில் ரொம்பவும் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க சொல்லியும் துரைமுருகனும் கதிர் ஆனந்தும் மிகவும் அஜாக்கிரதையாக இருந்ததாக திமுகவினர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். இதனால் ஸ்டாலின் துரைமுருகன் மீது மிகவும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் துரைமுருகனிடம் இருக்கும் பொருளாளர் பதவியைப் பறித்து எ வ வேலுவிடம் ஒப்படைக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.